நானும் இனி ஹீரோ தாண்டா.. களத்தில் குதிக்கும் வெற்றிமாறன்.? யாருடைய படத்தில் இணைய உள்ளார் தெரியுமா.? தெரிஞ்ச உங்களுக்கு வாரிபோடும்.

vetrimaran
vetrimaran

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சில நாட்களிலேயே தயாரிப்பாளராகவும் மாறி இரண்டிலும் சிறப்பாக வருவார்கள் தற்போது அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் வெற்றிமாறன் இயக்குனராக பல்வேறு சிறப்பான ஹிட் படங்களை கொடுத்து தன்னை காட்டிக் கொண்டாலும் அதன் பிறகு சில ஹிட் படங்களை தயாரிக்கவும் செய்தார் இதனால் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது பெயர் மக்கள் மத்தியில் பேச தொடங்கினர்.

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களில் ஹிட் படங்களை கொடுக்கின்றனர் ஆனால் ஹிட் கொடுப்பதைவிட அந்த படம் மக்கள் மத்தியில் எவ்வளவு நாள் இருக்கிறது பேசப்படுகிறது என்பது தான் பெரிது அதனை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் செய்து காட்டி வருகிறார் வெற்றிமாறன்.

இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் இன்று வரையிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது அந்த அளவிற்கு கதைக்களம் வித்தியாசமாகவும் யாரும் எடுக்காத வகையிலும் இருந்துள்ளன.

அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுத் தந்தனர் மேலும் அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டி துவக்கியவர் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் எடுக்க ரெடியாக உள்ளார்.

நடிகர் வெற்றிமாறன் சமீபகாலமாக சிறப்பாக நடிக்க உடைய நடிகர்களை தேர்வு செய்துவந்த வெற்றிமாறன் புதிதாக காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி கொண்டுள்ளதோடு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்படி இருக்க தற்போது இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி புதிதாக நடிக்கும் தொடங்க உள்ளார் அந்த வகையில் ஸ்டைலிஷ் இயக்குனராக இருந்து தற்பொழுது ஹீரோ வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒரு சிறப்பான ரோலில் வெற்றிமாறன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இயக்குனர் ஹீரோவாக மாற்றுவதால் இவர் இனி அதிலேயே அதிக கவனம் செய்தால் இவரால் சிறப்பான படங்கள்  கொடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றன.