அஜித்தின் 63 – வது திரைப்படத்தை இயக்க போவது நான் தான்.? மறைமுகமாக சொல்லும் இயக்குனர்.

ajith-
ajith-

தமிழ் சினிமா உலகில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை  வைத்திருப்பவர் தல அஜித். தனது ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஆக்சன், சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும்..

வசூலில் எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்கியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 61 மற்றும் 62 படங்களுக்கு இயக்குனர்களை தேர்வு செய்துள்ளார். அஜித்தின் 61வது திரைப்படத்தைத்  ஹச். வினோத் தீவிரமாக எடுத்து வருகிறார் அஜித்தின் 62வது திரைப்படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் அஜித் மிகப் பிரம்மாண்ட ஒரு சம்பளத்தை வாங்க இருக்கிறார் என்ற தகவலும் அடிபட்டு கொண்டிருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் 63 வது பட இயக்குனரயும் தற்போது தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் படங்களுக்காக பல முன்னணி இயக்குனர்கள் தொடங்கிய இளம் இயக்குனர் வரை காத்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் தற்போது 63 வது படத்தின் இயக்குனரையும் தேர்வு செய்துள்ளாராம் அந்த இயக்குனர் வேறு யாருமல்ல சிறுத்தை சிவா என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இதுபற்றி இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அஜித்தின் 63வது படத்தின் இயக்குனர் யார் என்பதை அவரே சொல்லுவார் என கூறியிருந்தார் அதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் 63ஆவது திரைப் படத்தை சிறுத்தை சிவா இயக்க 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவருகிறது.