ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக புதிய லுக்கில் மாறி இருக்கிறேன்.! பெருமைபடும் வில்லன் ஜெகபதி பாபு.

பிறமொழி பக்கங்களில் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் சிவா. தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து தனது தமிழில் முதல்வெற்றியை கண்டார் அந்த அளவிற்கு சிறுத்தை படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய தற்போது டாப் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

அஜித்தை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற சூப்பர்ஹிட் படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பவர்களும் டாப் நடிகர்கள் ஆகவே இருந்து வருகின்றனர் அந்த வகையில் ரஜினியை தொடர்ந்து மீனா, குஷ்பு, யோகி பாபு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் தற்பொழுது விசுவாசம் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஜெகபதி பாபுவும் தற்போது இந்த திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.

செய்தி உங்களுக்கு தெரியும் இந்த படத்திற்காக ஜகபதி பாபு மிகவும் கஷ்டப்பட்டு புதிய முயற்சி செய்து தனது லுக்கை  மாற்றி உள்ளார்.

மேலும் இதுபற்றி குறிப்பிட்டும் உள்ளார் அதில் ரஜினி சார் படத்திற்காக புதிய முயற்சியை கொடூரமான ஒரு வழியாக கடைசியில் அரவிந்த் சமேதா படத்தின் பாசி ரெட்டி லுக்கை மாற்றி வெற்றி அடைந்து விட்டேன் என குறிப்பிட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version