நானும் இங்கே துரோகி தான், நீயும் இங்கே துரோகி தான்.! மிரட்டலாக வெளியானது ஜெயம் ரவியின் அகிலன் படம் ஃபர்ஸ்ட் சிங்கிள்…

0
agilan
agilan

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல திரைபடட்ன்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது அகிலன் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி இவர் பூலோகம் படத்திற்கு பிறகு இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுடன் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் தான் அகிலன். மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து தன்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

துரோகம் என தொடங்கும் இந்த பாடல் வரிகள் அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் கிண்டல் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த அளவிற்கு ஒரு வெறித்தனமான பாடலாக இந்த பாடல் அமைந்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க கடலோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் புதிய லுக் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்ரே சொல்லலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  இரண்டாவது பக்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி அவர்கள் அகிலன் திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளது.  இன்னும் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.