நானும் தயாரிப்பாளர்களை தேடிச் சென்றேன்.! வெளிப்படையாக உண்மையை கூறிய ரேவதி.!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பலரது கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை ரேவதி. இவர் திருமணத்திற்கு பின்பு தான் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் தமிழக மக்கள் மத்தியில் இன்னும் அவர் நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இவர்கள்தான்.

 இந்நிலையில் மௌனராகம் திரைப்படம் எப்படி உருவானது என்று நடிகை ரேவதி ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். நடிகை ரேவதி சினிமா துறையில் முதல் முதலாக வந்து நடித்துக் கொண்டிருக்கிறது அவரிடம் முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு முழு படத்தின் கதையை கூறியது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தானாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மௌனராகம் திரைப்படத்தின் ஒன் லைன்  கதையை மட்டும் கூறியிருக்கிறார். மணிரத்தினம் அவர்கள் ரேவதி இடம் ஒன்லைன் கதையை கூரியபோது கார்த்திக் கதாபாத்திரம் எதுவும் கிடையாதாம் திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாத பெண்ணை கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து வைக்கிறார்கள் திருமணமான இரண்டாவது நாளில் விவாகரத்து கேட்கிறார். அந்தப் பெண் ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்தால் விவாகரத்து கிடைக்கும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார் அதன் பிறகு அவர்களுக்கிடையே எப்படி காதல் மலர்ந்தது என்பதுதான் இந்த படத்தின் முதலில் சொல்லப்பட்ட கதையாம். அப்போது கார்த்திக் கதாபாத்திரம் ராஜமௌலியின் நகைச்சுவை காட்சிகலே இல்லையாம்.

பின்னர் பகல் நிலவு சூட்டிங் ஸ்பாட்டில் மணிரத்தினம் கூறிய அந்த கதையை கேட்டவுடன் இந்தப் படத்தை எப்ப எடுத்தாலும் அதில் நான் தான் கதாநாயகியாக நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டாராம். மௌனராகம் திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர்களிடம் இந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லையாம் ஏனென்றால் இந்த படம் ஒடாது என்று கூறிவிட்டார்களாம்.

அதன் பிறகு பொறுத்து பொறுத்து பார்த்து ரேவதி மணிரத்தினத்திற்காக தயாரிப்பாளர்களை சந்தித்ததாகவும் கடைசியில் யாரும் அந்த படத்தை தயாரிக்க முன்வரததால் மணிரத்தினத்தின் அண்ணனான ஜி வெங்கடேஸ்வரன் அவர்கள் இந்த படத்தை தயாரித்தார் என்ற ரேவதி அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment