விஜயின் “நாளைய தீர்ப்பு” படத்தில் பயந்துக்கிட்டே நடிச்சேன்.. ரகசியத்தை உடைத்த ராதாரவி.!

80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும், கதாநாயகனுக்கு அண்ணன் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவான ராதாரவி. தமிழில் இவர் 1976 ஆம் ஆண்டு மன்மத லீலை என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் காதல் ஓவியம், அச்சமில்லை அச்சமில்லை, வைதேகி காத்திருந்தாள், அலை ஓசை, தெய்வ பிறவி  என பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து வெற்றி கண்டார்.

இப்பொழுது வயது அதிகரித்தாலும் திறமையின் மீது நம்பிக்கை வைத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் அவர்தான் அப்பா எஸ் சி சந்திரசேகர் குறித்தும் பேசி இருக்கிறார் அவர் சொன்னது என்னவென்றால் நடிகர் விஜய் முதல் முதலாக நடித்த நாளைய தீர்ப்பு படத்தில் என்னை மிரட்டி தான் எஸ் ஏ சந்திரசேகர்  நடிக்க வைத்தார்.

என்னிடத்தில் அவருக்கு அவ்வளவு உரிமை நானும் கால்சீட் கொடுத்து விட்டேன். அந்த படத்தில் நான் விஜயின் அப்பாவாக நடித்திருப்பேன் அந்த படத்தில் நடிக்கும் பொழுது வேறு எந்த படத்திலும் என்னை நடிக்க செல்ல அனுமதிக்க மாட்டார் என்னை அதட்டியே வேலை வாங்கினார் என உண்மையை உடைத்து சொல்லி உள்ளார் இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது விஷயத்தை அறிந்த  அப்படியா என கூறி கமெண்ட்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version