அடிபட்ட பெரியவரை தோளில் தூக்கிச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ

0
police
police

ஹைதராபாத்தில் கடும் மழையால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அப்போது அடிபட்ட முதியவரை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது தோளில் தூக்கி சென்ற வீடியோ அனைவரிடமும் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது..

ஹைதராபாத்தில் சமீபத்தில் பெய்த மழையில் கே எல் நகர் பகுதியில் சாலை எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது அதை சரி செய்யும் வேலையில் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் நாகமல்லு  மேற்பார்வையில் மாநகர பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்பொழுது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த இளைஞர் முதியவரை பைக்கில் வைத்து கொண்டு வந்துகோண்டிருந்தார் ஆனால் அந்த வழியாக சாலையில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்ததால் அவர்களால் ஸ்கூட்டரை ஓட்ட முடியவில்லை அதை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறை நாகமல்லு அந்த முதியவரை தோளில் தூக்கி சென்று நீர் இல்லாத இடத்திற்கு இறக்கி விட்டார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த அனைவரும் அந்த காவல்துறை அதிகாரியை  பாராட்டி வருகிறார்கள்.

இதோ வீடியோ..