ஒரு சராசரி மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசையிருக்கும் ஆனால் அது ஒரு சில தடைகள் வருதவதால் அந்த ஆசையை ஒதுக்கி விடுவார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு இருந்து வருபவர் தான் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித். பல ஆசைகளை வைத்து இருந்தாலும் முதலில் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அஜித் சினிமாவில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் பல்வேறு வெற்றி / தோல்வி படங்களை கொடுத்தாலும் அவருக்கான ரசிகர்கள் அவரை துண்டுவிடக்கூடாது என்பதற்காக தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் அதை உணர்ந்து கொண்ட அஜித்தும் சமீபகாலமாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறார்
அந்த வகையில் தற்போது அஜித் ஹச் . வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தை ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பைக் ரேஸ் நிறைந்த ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. வலிமை படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் தொடங்கி glimpse அனைத்திலும் அஜித் பைக்கில் வலம் வருவதை பார்க்க முடிகிறது.
அதனால் நிச்சயம் இந்த திரைப்படமும் சாதாரண ரசிகர்களையும் தாண்டி மற்ற ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது நிச்சயம் இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வலிமை படம் எடுக்க இயக்குனர் வினோத்துக்கு பல கண்டிஷன்கள் அஜித் போட்டுள்ளாராம் .
அதில் ஒன்று பைக் காட்சிகள் நடிக்கும் போது கண்டிப்பாக பாதுகாப்பு உடைகள் மற்றும் ஹெல்மெட் போன்றவற்றை அணிந்து தான் நடிப்பேன் என எப்பவும் கூறியிருந்தார் அதோடு மட்டுமல்லாமல் சேசிங் காட்சிகளின்போது ஹாரன் அடிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது.