“வலிமை” ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடந்துகொண்ட விதத்தை புட்டு புட்டு வைத்த ஹச். வினோத்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த படத்தில் இருந்து இதுவரை பல்வேறு அப்டேட்களும், புகைப்படங்களும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

கடைசியாக கூட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ உலக அளவில் வைரலானது என்பது குறிப்பிடதக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுபக்கம் வினோத் வலிமை படம் குறித்தும், அஜித் குறித்தும் சில சுவாரஸ்ய பதிவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் சில செய்திகளை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.

வழக்கப்படி ஒன்றில் அஜித்துடன் மூன்று படங்கள் அடுத்தடுத்து செய்கிறீர்கள் உங்களிடம் எதைக் கண்டு அவர் மீண்டும் மீண்டும் பயணிக்கிறார் என நினைக்கிறீர்கள்.? அஜித் சார் இதற்கு முன்பாக சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் செய்தார் சிவாவுடன் வீரம், விவேகம், விசுவாசம் ஆகிய மூன்று படங்களை செய்தார் நானே அவரிடம் நிறைய முறை இதைப் பற்றி பேசி உள்ளேன் உங்களுக்காக நிறைய பேர் கதை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களிடம் கதை கேட்டு வாய்ப்பு கொடுத்தால் அந்த உதவி இயக்குனர்களின் வாழ்க்கை வெளிச்சம் பெரும் என கூறியிருந்தேன் அதற்கு அவர் இசைவு தெரிவித்தார் ஆனால் ஒரு கதையை படமாக மாறும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அந்த இயக்குனருடன் ஒரு பொறி ஏற்பட வேண்டுமென நினைக்கிறார்.

முதல்நாள் சந்தித்தது முதல் மூன்றாவது படத்திற்கு கைகோர்த்தது உள்ளது வரை அஜித் அன்றும் இன்றும் எப்படி இருக்கிறார்.? எல்லா கமர்ஷியல் இயக்குனர்களும் பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்யவேண்டும் என்பதே விருப்பம் இருக்கும் ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு அஜித் சார் மிகவும் எளிமையாக இருக்கிறார் எனக்காக காபி போட்டுக் கொண்டுவந்து கொடுப்பார் எப்போதும் அவர் என்னை ஆச்சரிய படுத்துகிறார் ஒவ்வொரு முறை பார்க்கும்போது எனக்கு சற்றும் குறையாத உற்சாகம் ஏற்படுகிறது.

அடிக்கடி அவர் செட்டில் பேசுவது ஏதாவது சுட்டிக் காட்ட முடியுமா.? எப்பொழுது எல்லாம் நான் சோர்வாக இருக்கிறேன் எப்பொழுது காட்சிகள் திட்டமிட்டபடி வரவில்லை என்பதை அவர் நன்கு அறிவார் அதற்காக நான் சோர்ந்து போகும்போதெல்லாம் என் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக நடக்கும் என்பார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment