முதலிரவு அறையில் காதலனுடன் மனைவி.? கதவைத் திறந்த கணவனுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.!

0

கன்னியாகுமரியில் முதலிரவு அறையில் புதிதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த கணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்து புலியூர்குறிச்சி அமைந்துள்ளது, இந்தப் பகுதியில் மாடசாமி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார், மாடசாமிக்கு சுகன்யா என்ற 17 வயது மகள் இருக்கிறார், இவர் இதே பகுதியில் உள்ள கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார், சுகன்யா கல்லூரிக்கு தினமும் நடந்து சென்று தான் வந்தார்.

அப்படி நடந்து செல்லும் வழியில் சதீஷ் என்பவர் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் அந்த கடையில் அடிக்கடி பொருட்களை வாங்குவதற்காக சுகன்யா சென்று வருவார், அப்பொழுது அந்தக் கடையில் இருக்கும் சதீஷுடன்  நட்பு ஏற்பட்டுள்ளது, இந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து காதலாக மாறியது ஊரடங்கு காரணமாக இவர்கள் தங்களது காதலை செல்போனின் மூலம் வளர்த்தார்கள்.

தன் மகள் சுகன்யா வேறு ஒருவரை காதலித்து வருகிறார் என்றது அறிந்து மாடசாமி அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக இதை காதும் காதும் வைத்து முடித்து விட வேண்டும் என என்று தன்னுடைய சாதியிலேயே வேறு ஒரு மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அப்பொழுது புலியூர் குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோபாலன் மகன் விவேக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு சுகன்யா மற்றும் விவேக்கிற்கு திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள், திருமணம் முடிந்த அன்று அதேநாளில் முதலிரவு ஏற்பாடு செய்தார்கள் ஆனால் முதலிரவு அறையில்  சுகன்யா தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டிருக்கிறார், அப்பொழுது 36 வயது கணவன் விவேக் கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

அப்பொழுது சுகன்யா என்னை வலியுறுத்த வேண்டாம் எனவும் நான் காதலனுடன் தான் வாழ்வேன் எனவும் கூறுகிறார் இதனால் அதிர்ச்சி அடைந்த விவேக் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்படி இருக்கும் நிலையில் சுகன்யாவின் காதலன் சுகன்யாவை பார்ப்பதற்காக வீட்டின் சுவரில் ஏறி குதித்து உள்ளே வருகிறார் அப்பொழுது விவேக்கின் பெற்றோர் அவனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள் உடனே தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள் செல்போன் மூலம்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகிறார்கள், முதலில் சுகன்யாவிடம் விசாரணையை போலீசார் தொடங்குகிறார்கள் அப்பொழுது நடந்த அனைத்தையும் கூறுகிறார் சுகன்யா, அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய காதலன் சதீஷ்வுடன் தான் வாழ விரும்புகிறேன் எனவும் கூறினார், அதுமட்டுமில்லாமல் நான் காதலிப்பதை விரும்பாத என்னுடைய பெற்றோர்கள் அவசரஅவசரமாக கட்டாயப்படுத்தி விவேக்கிற்கு திருமணம் செய்து வைத்தார்கள் எனக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சுகன்யா ஏற்கனவே நானும் சதீஷும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார் உடனே சுகன்யாவை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடனே 17வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த கணவன் மாமனார் மாமியார் பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து போலீசார் அதுமட்டுமில்லாமல் சுகன்யாவின் காதலன் சதீஷையும் போட்கோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். காதலியை பார்க்க சென்ற காதலன் சதீஷ்ஷிற்கு நடந்ததை பார்த்து அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.