என்னாது ரித்திக் ரோஷனுக்கு இத்தனை கோடி சம்பளமா மயங்கி விழும் தயாரிப்பாளர்கள்.! கொலைக் கேஸ் ஆனாலும் ஆச்சரியமில்லை

0

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உலக அளவில் அழகான நடிகர் என அழைக்கப்படுபவர், அந்த அளவு தனது உடல் கட்டுக்கோப்பில் வைத்திருப்பதில் கைதேர்ந்தவர். அதேபோல் இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவர் நடித்த க்ரிஷ் திரைப்படம் ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது, இந்த நிலையில் சமீபகாலமாக இவரின் திரைப்படம் தோல்வியை சந்தித்து வருகிறது, இதனால் துவண்டு இருந்த ரித்திக் ரோஷனுக்கு சமீபத்தில் வெளியாகிய வார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வார் திரைப்படம் சுமார் 150 கோடி செலவில் உருவாக்கப்பட்டது ஆனால் உணவு உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இந்தநிலையில் ரித்திக் ரோஷன் தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிக்க முடிவு எடுத்துள்ளார்.

அதனால் தயாரிப்பாளர்களுக்கு இவரை வைத்து படம் எடுப்பதில் சிக்கலாக இருக்கிறது ஏனென்றால் சமீபத்தில் வெளியான வார் திரைப்படத்தில் இவருக்கு சம்பளமாக 48 கோடி கொடுக்கப்பட்டதாம், அந்த திரைப்படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை உடனடியாக ஏற்ற முடிவு செய்துள்ளாராம் ரித்திக் ரோஷன்.