Actor Vijay Deverakonda mango ice cream preparation video: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் கல்லூரி, பள்ளி, வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவரது திரைப்படமான அர்ஜுன் ரெட்டி, லைஃப் இஸ் பியூட்டிஃபுல், கீதகோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், போன்ற படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவக்கியுள்ளார்.
அந்த வகையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா வீட்டில் இருந்து கொண்டு தான் செய்யும் வேலைகளை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் வீடு துடைப்பது, பொருட்களை சுத்தம் செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
??. ilaage chestu veedu pillodu kaadu peddavaadu ayipoyadu ani amma tho twaralo anipinchukovalani?? https://t.co/32lD4X4lM0
— koratala siva (@sivakoratala) April 25, 2020