சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுப்பது எப்படி.! தோல்வியை சந்திக்காத நடிகர் பகத் பாசில்.. அதற்கான ரகசியத்தை உடைத்து உள்ளார்.

0

திரை உலகில் என்னதான் மிகப்பெரிய டாப் நடிகராக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு கட்டத்தில் தோல்வியை சந்திப்பது வழக்கம் ஆனால் மலையாள சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பிற மொழிகளான தமிழ், தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து அதிலும் ஹிட்களை கொடுத்து அசத்தியவர் நடிகர் பகத் பாசில்.

தமிழில் இவர் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து அசத்தினார் அதிலும் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவான அல்லி அர்ஜுன் நடிக்கும் “புஷ்பா” என்ற திரைப்படத்தில் வில்லன் கலந்த ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த திரைப் படம் வெளிவரும்போது பகத் பாசிலுக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.இந்த நிலையில் தமிழில் லோகேஷ் மற்றும் கமல் ஆகிய இருவரும் இணையும் “விக்ரம்” படத்தில் வில்லனாக பகத் பாசில் இணைவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த படத்தில் மட்டும் அவர் மிகப்பெரிய வெற்றியை கண்டுவிட்டால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே படைப்பார் என கூறப்படுகிறது.இந்த நிலையில் பகத் பாசில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தொடர் வெற்றிகான ரகசியத்தைப் பற்றி பேசியுள்ளார் அவர் கூறியது.

உங்களுக்கு ஒரு ஐடியா பிடித்து விட்டால் அதை தொடர்ந்து செய்யவேண்டும் எனவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தாலும் உங்களுக்கு நிச்சயம் தொடர் வெற்றிப் படங்கள் கிடைக்கும் என கூறினார்.

இந்த ஐடியாவை தற்போது பல தலைமுறை நடிகர்கள் கையில் எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.