நடிகர் அஜித்குமார் 61வது படத்திற்காக எவ்வளவு உடல் எடையை குறைத்துள்ளார் தெரியுமா.? ரகசியத்தை சொன்ன தயாரிப்பாளர் போனிகபூர்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர்  நடிகர் அஜித். இவர் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் கலவையான விமர்சனத்தை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து  உருவாக உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் கதையை கேட்ட உடனேயே அஜித் அதிரடியாக உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.

ஏகே 61  படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார் என கூறப்படுகிறது மேலும் சமுத்திரக்கனி இளம் நடிகர் வீரா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார் இவர் இதற்கு முன்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் சொன்னது அஜித்தின் 61வது திரைப்படத்தின் ஷூட்டிங் 32 நாள் நடந்து உள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர் இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20 அல்லது  25 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment