லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இப்ப அவரோட ரேஞ்சே வேற..

சில மாதங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடி எதிர்பாராத அளவு வசூலை ஈட்டிய விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமாக வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து மாநகரம் என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்ததன் காரணமாக அடுத்தடுத்து இவரிடம் கதை கேட்க பல டாப் நடிகர்களும் முன்வந்தனர் அந்த வகையில் அடுத்து கார்த்தியுடன் கைதி, விஜய் உடன் மாஸ்டர் போன்ற படங்களை கொடுத்து உலக நாயகன் கமலஹாசனுக்கே விக்ரம் என்னும் படத்தை கூறிஅவரை ஓகே சொல்ல வைத்துள்ளார்.

பின்பு கமலும் இந்த படத்தில் நடித்து அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்திலேயே விக்ரம் படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது மற்றும் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இதன் மூலம் இயக்குனர் லோகேஷ் கமலும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் கமல் பட குழுவில் பணியாற்றிய இயக்குனர்கள் நடிகர்கள் போன்ற சிலருக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்து தளபதி 67, கைதி 2,  இரும்பு கை மாயாவி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். லோகேஷ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வங்கியில் பணி புரிந்தார்.

பின்பு சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் அவர்களது நண்பர்களை வைத்து குறும்படங்களை இயக்கி வந்த லோகேஷ் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் இந்த நிலையில் அவர் வங்கியில் பணிபுரியும் போது மாத சம்பளமாக 8000 வாங்கி வந்தார். தற்போது விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

Leave a Comment