வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

nenchikku nithi
nenchikku nithi

சினிமா உலகில் ஒரு ஹீரோ வெற்றி படத்தை கொடுக்க திறமையும், கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தால் போதும் அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றி பெறும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் நண்பேண்டா, கண்ணேகலைமானே,  சைக்கோ, இப்படை வெல்லும், இது கதிர்வேலனின் காதல்,  மனிதன் போன்ற படங்களில் நடித்து அசத்திய..

இவர் சிறு இடைவேளைக்குப் பிறகு ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் 15படத்தின் ரீமேக் தமிழில் படமாக்கப்பட்டது.அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் வைத்தனர். இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது.

முதல் நாளில் மட்டுமே 1.50 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் கணிசமான வசூலை பெற  இரண்டு நாட்கள் முடிவில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சுமார் 3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. தொடர்ந்து மக்கள் மத்தியில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால்..

தொடர்ந்து படம் ஹவுஸ்புல் ஆகிக்கொண்டே இருக்கிறது மேலும் இரண்டு வாரங்களுக்கு படம் ஹவுஸ்புல்லாக ஓடும் என்பதே சினிமா ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது அதனால் நாளுக்கு நாள் நிச்சயம் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.