விக்ரம் திரைப்படம் 9 நாள் முடிவில் சென்னை ஏரியாவில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் ஆரம்பத்தில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் கமலஹாசன். ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமே நடித்து உலகநாயகன் கமலஹாசன் என்ற பட்டத்தையும் பெற்றார்.

இவரது நடிப்பைப் பார்த்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மிரண்டு போய் உள்ளனர் அந்த அளவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து முடிப்பவர் கமலஹாசன். இவர் காதல் சென்டிமென்ட் ஆக்ஷன் போன்ற அனைத்து அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியை கண்டவர்.

மேலும் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பன்முகம் கொண்டவர். கமலஹாசன் இப்படி சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த இவர் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உருவாகி வெளிவந்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..

இயக்க கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வெளிவந்தது. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளில் படம் வெளியாகி தற்போது கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து ஒரு சிறந்த படமாக வெளியாகியது.

அதனால் கமலஹாசன் படத்தில் பணியாற்ற இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் பரிசுகளை அள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளிவந்து நல்ல வசூலை அள்ளி வருகின்ற நிலையில் தற்போது வரை உலக அளவில் 260 கோடியை தாண்டி வசூலித்து வருகின்றன இந்த நிலையில் ஒன்பது நாள் முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment