கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் விஜய் தேவர கொண்டாவின் “லைகர்” படம் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்திய சினிமா உலகில் பல திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் உருவாகியிருந்தாலும் கதை அம்சம் சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றியை ருசிக்கும் அப்படி இல்லை என்றால் எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும் தோல்வியை சந்திப்பது உறுதி அந்த வகையில் பாலிவுட்டில் அண்மையில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்து உள்ளன.

ஆனால் தென்னிந்திய சினிமா பக்கம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான படங்கள் வெற்றியை ருசித்து உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் லைகர் இந்த படம் தற்பொழுது கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.

விஜய் தேவர் கொண்டா இதற்கு முன்பு காதல் செண்டிமெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் முதன்முதலாக ஆக்சன் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் இவருக்கு பெரிய வரவேற்பு பெற்று தரும் என பலரும் கருதினர். ஆனால் படம் பெரிய அளவில் ப்ரோமோஷன் எல்லாம் செய்திருந்தாலும் படம் எதிர்பார்த்தது போல் இல்லாததால் தற்போது ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் தேவர் கொண்டா நடித்த லைக்கர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் முதல் நாளில் மட்டுமே உலக அளவில் சுமார் 25 கோடி வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் சொல்லுகின்றன.

ஆனால் தற்பொழுது கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளதால் வருகின்ற நாட்களில் பெரிய அளவு வசூல் ஈட்டுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இதனால் படத்தின் பட்ஜெட்டை தாண்டி விடும் என படக்குழுவும், விஜய் தேவர் கொண்டாவும் நம்பி இருக்கின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment