அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி வைத்து எடுத்த திரைப்படம் விடுதலை இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவாகியது படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டது..
அதன்படி முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது. மேலும் படத்தின் ஒவ்வொரு சீனும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் ரசிகர்களின் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம்..
மூளை முடுக்கு, எங்கும் வெற்றிகளை அள்ளி வருகிறது அதன் காரணமாக விடுதலை படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அண்மையில் கூட படக்குழு இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது அவர்களுக்கு இணையாக கிஷோர்..
கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், சேத்தன், வேல்ராஜ், ராஜூவ் மேனன், பவானி ஸ்ரீ மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை படத்தின் வசூல் இதுவரை எவ்வளவு அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி விடுதலை திரைப்படத்தின் வசூல் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.. வருகின்ற நாட்களிலும் விடுதலை படத்தின் வசூல் குறையாது அதிகரிக்கும் படக்குழு கூறி வருகிறது அதற்கு ஏற்றல் போல இன்றும் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக விடுதலை படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.