பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்” திரைப்படம் – 3 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர். முதலில் ராணுவ வீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பார்த்திபன். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து முக்கிய நடிகராக பார்க்கப்பட்டு வந்த பார்த்திபன் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இவர் இயக்கத்தில் புதிய பாதை, பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ள குட்டிக்காரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து. சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தையும் பெற்றார். இப்படி தொடர்ந்து சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பயணித்து வந்த பார்த்திபன் அவர் இயக்கும் படங்களிலும் நடித்து வந்தார்.

அப்படி சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்திபன் இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் உடன் இணைந்து நடிகை பிரகிடா, வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசுலை அள்ளி வருகிறது.

அப்படி சமீபத்தில் வெளிவந்த வெற்றி படங்களான  டான், விக்ரம், யானை போன்ற படங்களை தொடர்ந்து இரவின் நிழல் படமும் வெற்றி படமாக மாறி வருகிறது. இந்த படம் வெளியாகிய ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் முதல் நாள் வசூலில் 90 லட்சம் வசூலை பெற்று அடுத்தடுத்த நாட்களில் மொத்த வசூல்  கோடிக்கணக்கில் எகிறியது.

அப்படி பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் மூன்று நாள் முடிவில் மட்டும் சுமார் 3.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளி வருகின்றன. இது இந்த படத்தின் வெற்றிக்கு நல்ல ஆரம்பமாக அமைந்துள்ளது மேலும் நாட்கள் செல்ல செல்ல இன்னும் பல கோடி வசூலை அள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment