“ஏ. ஆர். ரஹ்மான்” மாமன்னன் படதிற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரை உலகிற்கு பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ, கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி என சொல்லிகொண்டே போகலாம்.. இப்படிப்பட்ட உதயநிதி மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படம் தான் எனக்கு கடைசி படம் என சொன்னார்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகரித்து காணப்பட்டது ஒரு வழியாக படம் ஜூலை 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கியது.

மேலும் படத்தில் வடிவேலு, பகத் பாஸில், உதயநிதி ஆகியோர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது எனவும் சொல்லி வருகின்றனர். தொடர்ந்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வசூலிலும் பட்டையை கிளப்புகிறது இதுவரை மட்டுமே 40 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நாட்களிலும் மாமன்னன் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது அண்மையில் இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது மேலும் உதயநிதி மாரி செல்வராஜிக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதன் விலை கூட 55 லட்சம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மாமன்னன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய பல பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளி வருகின்றன அதன்படி மாமன்னன் படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்ததற்காக சுமார் 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.

Leave a Comment