லியோ படத்தில் நடிக்க “விஜய்” கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? மிரண்டு போன தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வாரிசு” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதுவரை லோகேஷ் எடுத்த அனைத்து படங்களுமே..

போதை பொருள் மற்றும் ஆக்சன் கலந்த ஒரு படமாக இருந்து வந்துள்ளது அதேபோல் தான் லியோ படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் டைட்டில் வீடியோவில் கூட அதைத்தான் மறைமுகமாக சொல்ல வருகிறது என பலரும் கூறுகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் நடிகர், நடிகைகளை  இழுத்துப் போட்டுள்ளார்.

விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா மற்றும் பலர் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப்படிப்பு காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பை நடைபெற்று வருகிறது.

அதேசமயம் நடிகர்கள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை  அதிகரிக்கவே வைக்கிறது படக்குழு. படம் வருகின்ற அக்டோபர் மாசம் வெளியாகும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிக்க விஜய்.. கிட்டத்தட்ட சுமார் 135 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் முலம் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தை பிடித்து உள்ளார். இதற்கு முன்பாக விஜய் வாரிசு படத்தில் நடிக்க 125 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Leave a Comment