நாட்டாமை திரைப்படத்தில் நடிக்க “சரத்குமார்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? படத்தின் மொத்த பட்ஜெட்

nattamai
nattamai

80 90 காலகட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்குமார். தற்போதும் இவர் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார் ஆனால் ஹீரோவாக அல்ல.. குணச்சித்திர கதாபாத்திரம் அப்பா சித்தப்பா போன்ற ரோல்களில் நடித்து அசத்தி வருகிறார். ஏன் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட விஜய்க்கு அப்பாவாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

இது போன்ற ரோல்களில் வேறு சில திரைப்படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் நாட்டாமை. இந்த படம் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது இதில் மீனா, குஷ்பூ, மனோரமா, பொன்னம்பலம், கவுண்டமணி போன்ற பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

அப்போது வெளிவந்த இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை அள்ளியது. இன்றும் ஒரு சில ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படம் ஆக நாட்டாமை படம் அமைந்துள்ளது. தற்போது இருக்கும் இளம் ரசிகர்களும் இந்த படத்தை டிவியில் பலமுறை கண்டு களித்து வருகின்றனர்.

இவ்வளவு ஃபேமஸான இந்த நாட்டாமை படம் குறித்து தற்போது ஒரு செய்தி சமூக வலைதள பக்கங்களில் உலா வருகின்றன.. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நாட்டாமை படத்தை எவ்வளவு பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 55 லட்சம் ரூபாய் தான்.

அதில் 5 லட்சம் ஹீரோ சரத்குமாருக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இணையாக காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டது போக மீதி பணத்தில் இந்த படத்தை சிறப்பாக எடுத்து முடித்துள்ளார் ரவிக்குமார்.