புதிய வெப்சீரிஸில் நடிப்பதற்காக “விஜய் சேதுபதி” வாங்க போகும் சம்பளம் – இத்தனை கோடியா.? மிரண்டுப்போன மற்ற நடிகர்கள்.!

நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற பல படங்களில் நடித்து ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று வந்தார்.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி ஹீரோவை தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் ரோல் போன்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழுவதும் அர்ப்பணித்து சிறப்பாக நடித்துக் கொடுத்து வந்தார். அந்த வகையில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரது வில்லன் ரோல் பெரியளவில் பேசபட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும் கமலுக்கு நிகராக சந்தானம் கதாபாத்திரத்தில் வில்லன் ரோலில் நடித்து மிரட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து இந்தாண்டு இவர் ஹீரோவாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன் போன்ற இரு படங்களும் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இப்படி வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களை கொடுத்து வருவதால் அவரது சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தியும் நடித்து வருகிறார். இப்படி படங்களுக்கு இடையே தற்போது விஜய் சேதுபதி ஒரு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வெப் சீரிஸ்க்கு மட்டும் சம்பளமாக 35 கோடி வரை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment