ஹாலிவுட் படத்தில் நடித்திற்காக “தனுஷ்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் தமிழ் சினிமா.

நடிகர் தனுஷ் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் நடிகர் தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, கர்ணன், அசுரன், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கொடுக்கப்பட்ட..

கதாபாத்திரத்தில்  பிரமாதமாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருப்பார். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், gray man, நானே வருவேன் என பல்வேறு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அதில் முதலாவதாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்த தமிழ் திரைப்படங்கள் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான gray man படமும் வெளிவர ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் கொஞ்ச நேரம் வந்து போனாலும் தனுஷ் கொடுக்கப்பட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருப்பார். குறிப்பாக சண்டை காட்சிகளில் சும்மா நடிகர் ஜாக்கிஜான் போல் பறந்து பறந்து சண்டை இட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அண்மையில் இந்த படத்தின் விழாவிற்கு தனது மகன்களுடன் தனுஷ் சென்று வந்திருந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ்  gray man படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல்களை கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் நடிகர் தனுஷ் 500000 டாலர் சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகர் தனுசுக்கான சினிமா பயணம் விரிவடையும் மேலும் ஹாலிவுட் பட வாய்ப்பும் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment