சிக்ஸ் பேக் நடிகர் ஆர்யா சேர்த்து வைத்திருக்கும் “சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் ஆர்யா. ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் திறமையான நடிகராக தென்பட்டாலும் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார். பட்டியல் படத்தில் இவருக்கு ஒரு நல்ல இமேஜ் கிடைத்தது அதை தக்க வைத்துக் கொண்டு  தொடர்ந்து ஆர்யா பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டே வந்தார்

ஆனால் அவருக்கு திருமுனை கொடுத்த படமாக பார்க்கப்பட்டது நான் கடவுள், மகதராசா பட்டினம் என சொல்லலாம் அந்த படங்களுக்கு பிறகு ஆர்யாவின் வளர்ச்சி அமோகமாக இருந்தது. தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து ஓடினார். கடைசியாக கூட இவர் நடித்த சார் பட்டா பரம்பரை, டெடி, கேப்டன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

இப்பொழுது கூட பெயிரிடப்படாத ஒரு சில படங்களில் ஆர்யா நடித்து வருகிறார் இப்படி திரையு உலகில் ஓடும் இவர் நிஜ வாழ்க்கையில் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது.  குடும்பத்துடன் தற்பொழுது நேரத்தை செலவிட்டாலும் தனக்கான மார்க்கெட்டை கீழே இறக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் ஆர்யா முன்புறமாக இருக்கிறாராம்

தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஆர்யா திரை உலகில் வந்த பிறகு  எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ஆர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது

சென்னை மற்றும் பல்வேறு இடங்களில்  இடங்கள் வீடுகள் இருக்கின்றன மேலும் நடிகர் ஆர்யா ஆடி, பென்ஸ் இ கிளாஸ் போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். இந்த தகவல் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்பது தெரியவில்லை.

Leave a Comment