மாதவனின் “ராக்கெட்ரி திரைப்படம்” – இதுவரை அள்ளிய ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறுவது இயக்குனர்கள் ஹீரோவாக மாறுவது ஹீரோக்கள் இயக்குனராக மாறுவது போன்று தனது திறமையை வளர்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில் நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனர் அவதாரம் எடுத்து வெற்றியை பெற்றுள்ளவர் மாதவன்.

முதலில் இவர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றி கண்டவர். ஒரு கட்டத்தில் இவரது திறமை பெரிய அளவில் பேசப்பட்டதால் பிற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது இதனால் இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த மாதவன் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் ஏங்கிய காலங்களும் உண்டு ஆனால் தமிழ் சினிமா இவருக்கு எப்பொழுதுமே நல்ல வாய்ப்பை கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார் அதன் பின் விக்ரம் வேதா என தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த மாதவன்.

திடீரென நம்பி நாராயணன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ராக்கெட்ரி என்னும் படத்தை இயக்கி அசத்தினார். இந்த படத்திற்காக இரண்டு மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டார் மேலும் இந்த படத்தை இயக்கி தயாரித்ததும் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடுகிறது.

தற்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை ராக்கெட்ரி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் ஹிந்தியில் நான்கு வாரங்களில் சுமார் 23 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது மற்ற இடங்களில் பார்க்கும் பொழுது முதல் வாரத்தில் 8.95 கோடி, இரண்டாவது வாரத்தில் 6.5 கோடி, மூன்றாவது வாரத்தில் 4.85 கோடி, நான்காவது வாரத்தில் 3.15 கோடி என வசூல் செய்துள்ளது. மொத்தமாக வைத்து பார்க்கையில் ராக்கெட்ரி திரைப்படம் சுமார் 50 கோடி வசூத்திற்கும் என கூறப்படுகிறது.

 

Leave a Comment