தொகுப்பாளர் ரக்ஷ்ன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒருநாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் விஜய் டிவி அதிக ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சி மக்கள் பலருக்கும் பிடித்த நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சி உலகம் எங்கும் பிரபலம் அடைந்தது. சமையல் தெரிந்த சில பிரபலங்களுடன் சமையல் தெரியாத காமெடி பிரபலங்களை இறக்கி என்டர்டெய்மெண்ட் நிகழ்ச்சியாக நடத்திவருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, பவித்ர லக்ஷ்மி, அஸ்வின், புகழ், சிவாங்கி போன்ற பலரும் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் வரை விஜே ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரக்ஷன் தொகுப்பாளராக அதிகம் பிரபலம் அடைந்து வரும் நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளராகவும் விருதை வாங்கினார். இதையடுத்து தற்போது ரக்ஷனின் சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்குவதற்காக ரக்சன் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வருகிறது.

Leave a Comment