மூன்றாவது முறையாக “ஏ” சான்றிதழ் வாங்கிய இயக்குனர் வெற்றிமாறன்.. விடுதலை படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் முதலில் பொல்லாதவன் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதன் பிறகு இவர் எடுத்த ஆடுகளம், வடசென்னை, அசுரன் என சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தும் வெற்றிப்படங்கள் தான் தொடர்ந்து தனுஷ் உடன் மட்டுமே படம் பண்ணி வந்த வெற்றிமாறன்..

திடீரென விஜய் சேதுபதி, சூரியை வைத்து “விடுதலை” என்னும் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மலை வாழ் மக்களுக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும்..

பிரச்சினையை தான் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி மற்றும் சூரி உடன் கைகோர்த்து பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜூ மேனன், ஆர் வேல்ராஜ், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர் என பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் சூப்பராக நடித்துள்ளனர் படம் வெளிவர இன்னும் விரல் விட்டு என்னும் நாட்களில் இருப்பதால் தொடர்ந்து விடுதலை படம் குறித்து மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் குறித்தும் பல தகவல்கள் வெளி வருகின்றன.

அதன்படித் தற்பொழுது விடுதலை படத்தின் மொத்த ரன்னிங் டைம் மற்றும் என்ன சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.. விடுதலை படத்திற்கு சென்சார் போர்ட் “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளது. வெற்றிமாறன் இதுவரை எடுத்த படங்களில் மூன்று படங்களுக்கு “ஏ” சான்றிதழ் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பொல்லாதவன், வடசென்னை  தொடர்ந்து விடுதலை படத்திற்கு கிடைத்துள்ளது. விடுதலை படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்பொழுது  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment