ரசிகர்களின் பேவரைட் நடிகை த்ரிஷா சேர்த்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் நடிகைகளுக்கு தோழியாக குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் திரிஷா. ஆனால் ஒரு கட்டத்தில் இவரது திறமை மற்றும் அழகை பார்த்து ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது. நடிகை திரிஷா அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதும் இவரது மார்க்கெட் சரிவை சந்திக்காமல் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் கூட குந்தவை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.

இவருக்கு வயசு ஒரு பக்கம் ஆகினாலும் இவரது இளமை குறையாமல் இருப்பதால் பட வாய்ப்புகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் தற்போது கோடிக்கணக்கில் தான் சம்பளம். சினிமாவில் தொட்ட எல்லாத்திலும்  வெற்றி கண்ட திரிஷா ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.

இதுவரை திரிஷாவுக்கு திருமண ஆசை வந்ததே கிடையாது என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை திரிஷா குவித்து வைத்து இருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் திரிஷாவின் சொத்து மதிப்பு சுமார் 75 லிருந்து 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்பட்டு வருகிறது. நடிகை திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் பட்சத்தில் அவரது சம்பளம் எப்பொழுது இருப்பதை விட அதிகமாக மாறும் என ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment