இயக்குனர் விக்னேஷ் சிவன் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்துக்கு வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

kaathu vaagula rendu kadhal
kaathu vaagula rendu kadhal

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா உலகில் படங்களை இயக்குவதையும் தாண்டி பாடகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். எனினும் அவரது பிரதான தொழில் இயக்குனர் என்பதால் அவ்வப்போது சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அசத்தி வருகிறார்.

அந்த வகையில் சிம்பு வரலட்சுமியை வைத்து போடா போடி எனும் திரைப்படத்தை இயக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன்பின் நானும் ரவுடிதான்,  தானா சேர்ந்த கூட்டம், போன்ற சிறப்பான படங்களை எடுத்து வந்த இவர் இப்பொழுது தனது காதலி நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தை உருவாக்கினார்.

இந்த படம் காதல் ரொமான்டிக் காமெடி என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் ஓடியது வசூலும் நன்றாகபள்ளி வருகிறது. குறிப்பாக படக்குழு எதிர்பார்த்ததை  விட அதிகமாக அள்ளி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK 62 படத்தை இயக்க இருக்கிறார் அதற்கான வேலைகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற வேளையில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்க..

இயக்குனர் விக்னேஷ் சிவன் எவ்வளவு சம்பளம் வாங்கி கொண்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்கையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக சுமார் 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இச்செய்தி தற்போது வைரலாகி வருகிறது.