தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அப்போ அது அதிகம் தான்.

0

actor vijay acted as a child artist how much he got as a salary: நடிகர் விஜய் அவர்களுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இவரது படங்கள் அதிக அளவில் வசூலிக்க காரணம் இதுவும் ஒன்றாக தற்போது வரையிலும் இருந்து வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னோடியாக விளங்கும் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை நிலையாக தக்கவைத்து கொண்டுள்ளவர் தளபதி விஜய்.

இவரது திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவரும் பொழுது அதை திருவிழா கோலமாக கொண்டாடுவதற்கு ரசிகர்களுக்கு கை வந்த கலை அதோடு மட்டுமல்லாமல் அப்படத்தை பாக்ஸ் ஆபீஸில் நம்பர்-1 ஆக மாற்றுவது வழக்கம். அபபடி இவரது படங்கள் தான் இப்படி கோடிகளை குறிக்கிறது என்றால்.

அவரும் தற்பொழுது ஒரு படத்துக்காக பல கோடிகளை வாங்கிக் குவித்து வருகிறார். இது நாம் அனைவரும் அறிந்த விஷயமே ஆனால் இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது ஒரு திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா. அதுவும் 1984 ஆம் ஆண்டு வெற்றி திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவர்கள் சம்பளமாக ரூபாய் 500 வாங்கினார்.

அந்த காலகட்டத்திலேயே 500 ரூபாய் என்பது மிகப்பெரிய ஒரு சம்பளமாக கருதப்பட்டது. தளபதி அப்பவே மாஸ் காட்டியுள்ளார். இதனை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.