நடிகைகளையே மிஞ்சும் சீரியல் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோ ஒரு நாள் சம்பளம் மட்டுமே இவ்வளவா.? என வாய் பிளக்கும் ரசிகர்கள்.

சீரியல் நடிகைகளின் புதிய சம்பள பட்டியலை பார்த்து தமிழ் பிரபலங்கள் பலர் ஷாக்காகி உள்ளனர். வெள்ளி திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கும் கூட இவ்வளவு சம்பளம் கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிகர் நடிகைகள் படம் பண்ணுவது இயலாத காரியம் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அவர்கள் நடித்தாலும் முன்னணி நடிகர்கள் மட்டுமே அது சாத்தியம் ஆகி வருவது வழக்கம்.

சின்னத்திரை அப்படியல்ல சீரியல் மிக சிறப்பாக சென்றால் அந்த சீரியலை பல வருடங்களாக தொடர்ந்து இயக்கப்படுவது நாமறிந்ததே. இதன்மூலம் சம்பளம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு கூட போட்டி போடும் அளவிற்கு தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ளுகின்றனர் சின்னத்திரை நடிகைகள்.

திரையில் பல ஆண்டுகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பல பிரபலங்கள் தற்போது சீரியல்களில் நடித்து வருவது வழக்கம். அந்த வகையில் வடிவுகரசி, வில்லியம்ஸ், மோனிகா ஆகியோர் இருக்கிறார்கள் இவர்கள் கூட ஒரு எபிசோடுக்கு பத்தாயிரம் ரூபாய்தான் வாங்குகிறார்கள். ஆனால் இவர்களைவிட ஆலயா மானசா ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்.

காமெடி ரோலில் காலக்கிவரும் நளினிக்கும்,வில்லியாக நடிக்கும் சுதா சந்திரனுக்கும் 20 ஆயிரம் ரூபாயை ஒரு எபிசோடுக்கு கொடுக்கப்படுகிறது. இவர்களைப் போல பல முக்கிய பாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளான மௌனராகம் சமித்தா, தெய்வமகள் சத்யா,வாணி போஜன் சரவணன் மீனாட்சி ரஷிதா ஆகியோர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் 35000 என கூறப்படுகிறது.

சினிமாவின் முன்னணி நடிகை ராதிகாவிற்கு ஒரு எபிசோடுக்கு 1.5 லட்சம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்டை பார்த்தால் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளே அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். இதனை அறிந்த வெள்ளித்திரை நாயகிகள் பேசாமல் சின்னத்திரை பக்கம் போகலாமா என்று யோசித்து வருகின்றனர்.

Leave a Comment