ஹிப்ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்.

தமிழ் சினிமாவில் பாடல் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதில் வெற்றி கண்டு பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தார் ஹிப்ஹாப் ஆதி. முதலில் இவர் ஆல்பம் பாடலுக்கு இசையமைத்து வெற்றி கண்டதன் மூலம் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரை தேட ஆரம்பித்தனர்.

அந்த வகையில் முதலாவதாக சுந்தர்.சி கண்டுபிடித்து தனது திரைப்படமான “ஆம்பள” படத்திற்கு இசை அமைக்க வைத்தார். முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி நல்ல பெயரை பெற்றதோடு மட்டுமல்லாமல் அந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதன்பின் இவர் நான், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி, வைராஜா வை போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல்கள் பாடியும் இசை அமைத்தும் வெற்றி கண்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இவர் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். முதல் படமான மீசையமுருக்கு படத்தை அவரே இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து இவரது பல்வேறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது இயக்கி வெளியான திரைப்படம் தான் “சிவகுமாரின் சபதம்”. படத்தின் டிரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் ஆதியுடன் இணைந்து மாதுரி, கதிர், பிரங்க்ஸ்டர் ராகுல் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் சிவகுமாரின் சபதம் படம் முதல் நாள் வசூல் குறித்து தகவல் ஒன்று அதிரடியாக வெளியாகியுள்ளது அதன்படியே முதல் நாள் வசூல் மட்டுமே சுமார் 2 கோடியே 50 லட்சம் அள்ளிய தாக தகவல்கள் வெளியாகின்றன.

Leave a Comment