விஜய் ஆக்சனில் மிரட்டிய “துப்பாக்கி” திரைப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா.? தரமான சம்பவம் செய்த தளபதி.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் இப்பொழுதும் சிறந்த இயக்குனர்களுடன் கதையை கேட்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்தவகையில் இயக்குனர் முருகதாஸ் உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

சும்மா சொல்லக்கூடாது இயக்குனர் முருகதாசும் வித்தியாசமான  படங்களை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கொடுத்து வலம் வருபவர் இதுவரை பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர் இதுவரையும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் எங்கிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இயக்குனர் முருகதாஸ் அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய வெற்றிகண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் வைத்து இதுவரை இவர் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் படங்கள்தான் அதிலும் குறிப்பாக துப்பாக்கி திரைப்படம் ஆக்ஷனுக்கு பெயர்போன படமாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் கை கோர்த்தது காஜல் அகர்வால், சத்தியன், மலையாள முன்னணி நடிகர் ஜெயராஜ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள்  இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர். படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது துப்பாக்கி படம்.

இத்திரைப்படம் 100 கோடிக்கு வசூல் செய்தது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம்  அள்ளிய உண்மையான வசூல் சுமார் 130 கோடி என தெரியவருகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும்  மட்டுமே துப்பாக்கி திரைப்படம் சுமார் 72 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment