சம்பள விஷயத்தில் பிரியங்காவை ஓவர்டேக் செய்து அசத்தும் இமான் அண்ணாச்சி எவ்வளவு தெரியுமா.? ஷாக்கிங் தகவல்.

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பி அடித்து நொறுக்கி வருவதால் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களை நடத்தி வெற்றி கண்டு வருகிறது விஜய் டிவி. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5 வது சீசன் ஆரம்பித்து 34 நாட்களுக்கு மேல் ஆகிவட்டது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஐந்து பேரில் வெளியாகியுள்ளன.

முதலில் நமிதா மாரிமுத்து மட்டும் சில காரணங்களால் வெளியேறினார் மீதி நால்வரும் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் அடைந்த பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் நீண்ட தூரம் பயணிப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான் ஏனென்றால் அவர் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அதன் மூலம் இந்த போட்டியாளர்கள் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது எலிமினேஷன் தொடர்ந்து வைத்துக் கொண்டே இருப்பதால் போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வருவதால் இனி பிக்பாஸ் வீட்டில் மோதல் வெடித்து இனியும் பிரபலங்களும் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளதால் அவர் அவர் இனி தனது முழு திறமையை வெளிகாட்டினால் மட்டுமே தன்னை தக்கவைத்துக்கொள்ள முடியும் சுழல் நிலவி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் வீட்டில் சம்பள விவரம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது அபிநய் ஒரு வாரத்திற்கு 2.75 லட்சம் சம்பளம் வாங்குகிறார் இப்போ பிக் பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இவர் தான். அவரை தொடர்ந்து மதுமிதா அடுத்ததாக அண்ணாச்சி, ராஜீ, பிரியங்கா ஆகியோர் வாங்கு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இமான் அண்ணாச்சி விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்காவை விட அதிகம் சம்பளம் வாங்குவது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இமான் அண்ணாச்சியை ஒரு வாரத்திற்கு 1.75 லட்சம் வாங்குகிறார் பிரியங்கா 1.2 லட்சம் தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment