இப்போ 125 கோடி.. “பூவே உனக்காக” திரைப்படத்தில் நடிக்க தளபதி விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த தகவல்

0
vijay
vijay

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த “வாரிசு” படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது அதைத் தான் புகைப்படங்களும் உறுதிப்படுத்துகின்றன. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிந்தது அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.  தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய்.

ஆரம்ப காலகட்டத்தில் அவரது அப்பாவின் மூலம் அறிமுகமானார் ஆனால் அப்பொழுது இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதோடு மோசமான விமர்சனத்தை பெற்றது ஆனால் அதையெல்லாம் பாசிட்டிவாக எதிர்கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் தான் இயக்குனர் விக்ரமன் சொன்ன பூவே உனக்காக கதை ரொம்ப பிடித்து போக அந்த திரைப்படத்தில் நடித்தர்.

படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் வசூலில் பட்டையை கிளப்பிய அதிக நாட்கள் ஒடியது இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்கள் தளபதி விஜயை வைத்து படம் பண்ணினர் அந்த படம் அனைத்தும் வெற்றி பெற்றது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பூவே உனக்காக திரைப்படத்தில் நடிக்க தளபதி விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் நடிக்க தளபதி விஜய் சுமார் 5 லட்சம் வாங்கிய உள்ளாராம் ஆனால் தற்பொழுது ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் சுமார் 125 கோடி என சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது தளபதி தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது