வசூல் மழையில் தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” – 5 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொண்டு ஹிட் படங்களை கொடுத்து அசைத்து வருகிறார். அதற்கு ஏற்றார்போல தனது படம் வெற்றி பெறும் போது தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி வருகிறார்.

இப்பொழுது கூட நடிகர் தனுஷ்  தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகைகளில் தற்பொழுது இயக்குனர் மித்திரன்  ஜவகர் என்பவருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்தார் இந்த படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபெறுகிறது.

இந்த படத்தில் தனுசுடன் கைகோர்த்து நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க திரையரங்கை நாடுகின்றனர்.

மேலும் சில வருடங்களுக்கு கழித்து தனுஷின் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளதால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர். அதன் காரணமாகவே தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படம் நல்லவசூலை அள்ளி வருகிறது இதுவரை ஐந்து நாட்கள் முடிவில் சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

அண்மையில் வெளிவந்த படங்களிலேயே நல்ல வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்களில் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம்  படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது. வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே 60 கோடி மேல் வசூல் செய்துள்ளது  வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால்  இந்த படம் நிச்சயம் 100 கோடி வசூல் உள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.