3 நாள் முடிவில் அதர்வாவின் “குருதி ஆட்டம்” படம் – அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
kuruthi-aatam
kuruthi-aatam

முரளியின் மகன் அதர்வா சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த பானா காத்தாடி, 100, ஈட்டி என பல்வேறு திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் இந்த படங்களை தொடர்ந்து கூட பல்வேறு படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ், நிறங்கள் மூன்று, ட்ரிகர், ருக்குமணி வண்டி வருது போன்ற படங்களில் கமீட்டாகி நடித்து வருகிறார் இப்போ இவர் நடிப்பில் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

குருதி ஆட்டம் படம் முழுக்க முழுக்க ஆக்சன், காதல், காமெடி என அனைத்தும் கலந்து  இருந்தது. இந்த படத்தில் அதர்வாவுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர்,  ராதாரவி, ராதிகா சரத்குமார், வினோத் சாகர், பிரகாஷ், ராகவன், கண்ணா ரவி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் குருதி ஆட்டம் படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் காரணமாகவே நல்ல வசூல் வேட்டையும் நடத்துகிறது. முதல் நாளே கோடிகளை வசூல் செய்த குருதி ஆட்டம் திரைப்படம் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்பது குறித்து தற்பொழுது தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அதர்வாவின் குருதி ஆட்டம் திரைப்படம்.

மூன்று நாள் முடிவில் மட்டுமே சுமார் 4 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் பெரிய நடிகரின் படங்கள் வெளிவரவில்லை என்றால் நல்ல வசூலை அள்ளும் என தெரிய வருகிறது. அதே சமயம் வெளிவந்த எந்த படமும் இந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.