மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் மீது எவ்வளவு பாசமாக இருந்துள்ளார் பாருங்கள்- வைராலாகும் புகைப்படம்.

80, 90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் அதேசமயம் திறமையையும் சிறப்பாக காட்டி நடித்தார். மேலும் தமிழில் இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது மேலும் இவரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தமிழ் சினிமாவில் வெற்றியை மட்டுமே சம்பாதிக்க ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் ஹிந்தி பக்கமும் அடி எடுத்து வைத்து அசத்தினார்.

இந்தியிலும் டாப் நடிகர்களைவிட இவரது படங்கள் தொடர்ந்து அதிக ஹிட் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார். இந்தியிலும் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நடிகை ஸ்ரீதேவி  தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் குஷி கபூர் மற்றும் ஜான்வி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர். தனது குடும்பத்துடன் சினிமா துறையில் சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி பிப்ரவரி 24ஆம் தேதி கடந்த 2018ம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரைத் தொடர்ந்து அவரது மகனும் சினிமா உலகில் கால்பதித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர் அவரது கணவர் போனி கபூர் இந்தி மற்றும் தமிழ் சினிமா படங்களை தயாரித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் போனிகபூர் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும்  ஸ்ரீதேவி கணவர் போனிகபூர்  மீது இவ்வளவு பாசம் வைத்து உள்ளீர்களா என கூறி ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

sreedevi
sreedevi

Leave a Comment