அடஅடஅட எத்தனை வருடங்கள் ஆகுது இந்த மாதிரி உங்களை பார்த்து.! இணையத்தில் வைரலாகும் அஜித்,ஷாலினி புகைபடம்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

ஏனென்றால் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் லாபம் பார்த்தது. இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

மேலும் ஏகே 62 திரைப்படத்தின் படபிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை ஷாலினி மற்றும் அஜித் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட காரணமாக இருந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் திரைப்படம் இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஷாலினி அவர்கள் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் அஜித் அவர்களுக்கு ஷாலினி மீது உள்ள ஈர்ப்பால் அவர் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது.

அதன் பிறகு ஷால்னியிடம் தன்னுடைய காதலை கூறியவுடன் சிறிது ஆண்டுகளிலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தற்போது வரையிலும் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார் நடிகை ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் சரண் உடன் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

ajith-shalini
ajith-shalini

Leave a Comment