12 நாள் முடிவில் “விக்ரம் திரைப்படம்” தமிழகத்தில் மட்டும் எவ்வளவு கல்லா கட்டியது தெரியுமா.?

சினிமா உலகில் புதுமையை தேடி ஓடும் நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய காட்சிகளை படத்தில் வைப்பது அவரது ஸ்டைல் அந்த வகையில் ஆளவந்தான், தசாவதாரம் படங்கள் நிறைய இருக்கின்றன.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படமும் புதிய தொழில் நுட்பத்தை நிறைய பயன்படுத்தி அசத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும்  இதுவரை இல்லாத சற்று வித்தியாசமான கதைக் களமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசுலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. விக்ரம் திரைப் படத்தில் கமலுடன் கைகொடுத்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இது இப்படி இருக்க விக்ரம் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 310 கோடி வசூல் செய்து உள்ளது தமிழகம் மற்றும் கேரளாவில் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இந்த விக்ரம் திரைப்படம் 135 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இன்னும் ஓரிரு நாட்களில் மட்டுமே விக்ரம் திரைப்படம் 150 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை தமிழ் சினிமா உலகில் படைக்க  இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment