4 வாரத்தில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் “வலிமை” படம் ஓடுகிறது தெரியுமா.? வெளிவந்த ரிப்போட்டர்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித் அப்படித்தான் அண்மையில் இவர் நடித்த விசுவாசம் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றன.

அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அஜித்தின் வலிமை திரைப்படமும் கோலாகலமாக உலக அளவில் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இருந்ததால் திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதுவரை நான்கு வாரங்களை கடந்து வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.வசூல் ரீதியாக வலிமை திரைப்படம் சுமார் 224 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அஜித்தின் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை முதலில் பெற்றாலும் 14 நிமிட காட்சிகளை கட் செய்து படத்தை மீண்டும் விட்டது.

படம் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் தமிழகத்தில் மற்ற இடங்களிலும் வலிமை திரைப்படம் அடித்து நொறுக்குகிறது. தமிழை தாண்டி இந்த திரைப்படம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி ஆகியவற்றிலும் நல்ல வரவேற்பை கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து விட்டாலே அந்த திரைப்படம் நல்லதொரு படமாகப் பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம் நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருப்பதால் அல்லது ஒரு வெற்றிப்படமாக வலிமை திரைப்படம் பார்க்கப்படுகிறது நான்காவது வாரத்தில் 92 ஷோ ஓடிக் கொண்டிருக்கிறதாம் குறிப்பாக 46 திரையரங்குகளில் அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

Leave a Comment