நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் அவரது அப்பா டி ராஜேந்திரன் உதவியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பின்பு ஒரு வயதை எட்டிய பிறகு ஹீரோவாக படங்களை கொடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடிகர் சிம்பு எவ்வளவோ வெற்றி தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் ஒரு கட்டத்தில் சிம்பு உடல் எடை கூடி நடித்த ஒரு சில திரைப்படங்களின் மூலம் பெறும் சரிவை சந்தித்தார். அதனால் தனது உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என கடுமையாக ஜிம் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களை கொடுத்தார் அதில் அவர் நடித்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது.
இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்க போட்டி போட்டு வந்தனர். அதன்படி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்த்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்தார்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார் மற்றும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்இந்த படத்தின் போஸ்டர்கள் சில இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது அதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக உலக நாயகன் கமலஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் வருகை தர இருக்கின்றனர் என வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து படத்தின் பாடல்களுக்கான ட்ராக் லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஐந்து பாடல்களுக்கு எழுத்தாளர் தாமரை வரிகள் எழுதி இருக்கிறார். இந்த ட்ரக் லிஸ்ட் போஸ்டர் தற்போது வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
