அஜித்தின் “துணிவு” திரைப்படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா.? வெளிவந்த தரமான அப்டேட்..

நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இப்பொழுது ஹச். வினோத்துடன் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் உருவாகி இருக்கிறதாம்.

இதனால் இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்றவை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் பிக்பாஸ் பிரபலம் அமீர்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்திலிருந்து.. ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துணிவு திரைப்படம்  ஆக்சன் மற்றும் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக உருவாகியுள்ளதால் இந்த படத்தில் பாடல்கள் கம்மியாக இருக்கும் என கூறப்பட்ட வந்தது.

அதன்படி பார்க்கையில்   இந்த படத்தில் ஒட்டு மொத்தமாகவே மொத்தம் மூன்று பாடல்கள் தான் இருக்கும் என கூறப்படுகிறது அதில் ஒரு பாடல்கள் குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த பாடல் தான் சில்லா சில்லா பாடல் என கூறப்படுகிறது  அந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்  அனிருத் தான் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment