உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மிரட்டியுள்ள “விக்ரம்” படத்தில் சூர்யா வரும் காட்சிகள் எவ்வளவு நிமிடம் தெரியுமா.?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர் இப்போ உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை உருவாக்கியுள்ளார் படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரசிகர்கள் மற்றும் மக்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள தொடர்ந்து விக்ரம் படம் குறித்தும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் குறித்தும் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூறி வருகின்றனர். விக்ரம் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்பதால் இந்த படத்தில் கமலுக்கு நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்த நடிகர்களை..

லோகேஷ் கனகராஜ் அழகாக இடையே வைத்துள்ளார் அந்தவகையில் கமலுடன் இணைந்து சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் போன்ற பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எப்பொழுது அவரது காட்சிகள் இடம் பெற போகிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் சூர்யா விக்ரம் படத்தின் கடைசி 10 அல்லது 15 நிமிடங்களில் தான் வந்து போவார் அந்த காட்சிகள் முக்கியமானது ஏனென்றால் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் சூர்யா தான் நடிக்கப் போவதாக கமல் ஏற்கனவே கூறியிருந்தார் அதனால்தான் சூர்யா நடிக்கிறார் என கூறப்படுகிறது மேலும் சூர்யா ஒரு முக்கிய வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் சூர்யா வில்லன் ரோலில் நடிக்க காரணம் கமல் கேட்டுக்கொண்டதற்கிணங்க தானாம். சூர்யா சினிமா உலகில் தனது குருவாக நினைப்பது கமலை தான் அதனால் அவர்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க எந்த கதாபாத்திரம் என கேட்காமல் கூட இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளி வருகிறது.

Leave a Comment