“V” தலைப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படங்கள் மொத்தம் இத்தனையா.? லிஸ்ட் பெருசா இருக்கு..

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர்  ஆரம்பத்தில் நிறைய தோல்வி படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு ரசிகர்களின் மனநிலைமைக்கு ஏற்ப நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன.

இப்பொழுது கூட இவர் தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். பிரபல  தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். AK 61 படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார்,  இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு.

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடைசி படப்பிடிப்பிற்காக பாங்காங் செல்லி இருக்கிறது.  அதற்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது அதன்படி பார்க்கையில் இன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்து உள்ளது.

போஸ்டர் வேற லெவலில் இருக்கிறது. அந்த போஸ்டரில்  அஜித்  துப்பாக்கி உடன் இருக்கிறார்.  போஸ்டர் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.. மேலும் இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என இப்பொழுதே அஜித் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக அஜித் வி சம்பந்தப்பட்ட படங்களில் பெரிதும் நடித்து வந்துள்ளார் இந்த நிலையில் அஜித் இதுவரை வி தலைப்பில் நடித்த படங்கள் மொத்தம் எத்தனை என்பது குறித்து விலாவாரியாக தற்போது பார்க்க இருக்கிறோம். வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், வலிமை போன்ற படங்களாகும்..

Leave a Comment