தளபதி விஜய் 5 வருடத்தில் கொடுத்த தோல்வி திரைப்படங்கள் இத்தனையா.? தூக்கிவிட்ட ஏ ஆர் முருகதாஸ்

திரை உலகில் இருக்கும் ஹீரோகள் இரண்டு, மூன்று தோல்வி படங்களை கொடுத்தாலே அவரது மார்க்கெட் மிகப்பெரிய அடியை வாங்கிவிடும் அதை உணர்ந்த ஒவ்வொரு பிரபலமும் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்கவை வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கின்றன இதனால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி வருகிறார். தற்பொழுது லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பொழுது பல வெற்றி படங்களை விஜய் கொடுத்திருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் பல தோல்வி படங்களையும் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 2007  லிருந்து 2011 விஜய்க்கு சரி இல்லாத   ஆண்டுகளே என்று சொல்லலாம்..

இந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் நடித்த படங்கள் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் என அடுத்தடுத்த அதிக  தோல்வி படங்களை கொடுத்தார். ஐந்து வருடத்தில் அதிக தோல்விய படங்களை கொடுத்திருந்தாலும் 2012 தளபதி விஜய்க்கு வெற்றி ஆண்டாக மாறியது.

ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படம்  நன்றாக ஓடின நல்ல வசூலை அள்ளியது இருப்பினும் அதே ஆண்டில் வெளியான “துப்பாக்கி” திரைப்படம் தான் விஜய் கேரியரிலேயே மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக அப்பொழுது பார்க்கப்பட்டது. அந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மாபெரும் வெற்றியை பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment