AK 61 படத்தின் ஷூட்டிங் எத்தனை நாள் முடிவடைந்து உள்ளது தெரியுமா.? எப்போது ரிலீஸ் – ரகசியத்தை உடைத்த போனிகபூர்.

நடிகர் அஜித் குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 63-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாகவும்..

மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரகனி, வீரா, john kokken மற்றும் பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இது எப்படி இருந்தாலும் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

AK 61 படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மிக பிரமாண்ட செட் போட்டு இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படி இருக்கின்ற நிலையில் நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் 61வது படத்தையும் தயாரிக்கிறார்.

இவர்  சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் படம் குறித்து பேசியுள்ளார் அது குறித்து விலாவரியாக நாம் பார்ப்போம். AK 61படத்தின் சூட்டிங் இதுவரை 35 நாட்கள் வெற்றிகரமாக முடிந்து உள்ளதாகவும் படத்தை நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியிருந்தார்.

இந்த படத்தின் மொத்த ஷூட்டிங் வெறும் 75 நாட்கள் தான் அதில் பாதி முடிவடைந்துள்ளது வெற்றிகரமாக மீதியையும் சீக்கிரமாகவே எடுத்து படத்தை ரிலீஸ் செய்யும் என கூறப்படுகிறது. ஒரே வருடத்தில் இரண்டு படத்தை அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் கொடுக்கிறார் இதனால் ரசிகர்கள் செம ஆர்வத்தில் தற்போது துள்ளிக் குதிக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version