கமலின் விக்ரம் திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் கிடைத்த “ஷேர்” எத்தனை கோடி தெரியுமா.?

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் போடாத கெட்டப்பே கிடையாது நடிக்காத கதாபாத்திரமே கிடையாது அந்த அளவிற்கு பல படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் அண்மையில் கூட இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். விக்ரம் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தான் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தது.

இந்த படத்தில் உலக நாயகன் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, நரேன், ஏஜென்ட் டினா மற்றும் பலர் நடித்து அசத்தினர். கமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடியது.

அதன் காரணமாகவே விக்ரம் திரைப்படம் பிரம்மாண்டமான வசூலை அள்ளியது. விக்ரம் திரைப்படம் உலகம் எங்கும் சுமார் 440 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன தமிழகத்தில் மட்டுமே 180 கோடியும் கேரளாவில் 40 கோடிக்கு மேலேயும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன.

விக்ரம் திரைப்படம் திரையரங்கையும் தாண்டி ஓடிடி தளத்திலும் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கமலின் விக்ரம் திரைப்படம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு ஷேர் வந்துள்ளது என்பது குறித்து பார்ப்போம். அந்த வகையில் தமிழகத்தில் விக்ரம் திரைப்படம் சுமார் 90 கோடி ஷேர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளி வருகிறது.

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இந்த ஒரு சாதனையை செய்தது இல்லையாம் அதுவும் 50 நாட்களில் மட்டுமே இப்படி ஒரு சாதனையை செய்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் படத்தை தயாரித்த உலகநாயகன் கமலஹாசனும் படக்குழுவும் செம்ம திருப்தியில் இருக்கிறதாம்.

Leave a Comment